திரு முத்தையா இரட்ணபாலன் அவர்களின் வரிகளில் உருவான கிருஸ்ணர் மற்றும் கந்தனின் பக்திப்பாடல்கள் வெளியீட்டு விழா. UPDATED 21-09-2017

 

 

திரு முத்தையா இரட்ணபாலன் அவர்களின் வரிகளில் உருவான இரண்டு இசை இறுவெட்டுக்கள் (CD) மற்றும் காணொளிப் பேளை (DVD) வெளியிடப்படவுள்ளது. கிருஸ்ணர் மற்றும் கந்தனின் புகழை பாடும் பால்களை தென்இந்தியா சினிமா பாடகர்களோடு இணைந்து திரு இரட்ணபாலன் அவர்கள் பாடியுள்ளார்கள்.

இடம்: ஈஸ்டாம் முருகன் கோவில் அரங்கம் 78-90 Church Road E12 6AF.
காலம்: 24.09.2017 (ஞாயிற்றுக்கிழமை)
நேரம்: காலை 10.30 தொடங்கி பிற்பகல் 13.30 வரை. 
“ஆறுபடையானுக்கு அருளிசையமுதம்” என்னும் இறு வட்டும்
“ஆயர்பாடியானுக்கு அருளிசைக்கோலம்” என்ற இறு வட்டும்
· “நான்முகி நாயகி நாராயணி” என்ற காணொளிப் படத் தொகுப்பும் (DVD) வெளியிடப்பட இருக்கின்றன .

கிழக்கு லண்டனில் பன்னெடுங்காலமாக இயங்கி வருகின்ற சட்டவாளர் நிறுவனமான RATNA & CO இந்த வெளியீட்டு விழாவை நடத்துகின்றது
·அனைவரும் அன்புடன் அழைக்கப்படுகின்றார்கள்.

·மதிய உணவு விருந்துபசாரமும் வழங்கப்படும்.

·எல்லோரும் விழாவில் கலந்து கொண்டு பக்தி பாடல்கள் அடங்கிய இசை இறு வட்டுக்களையும் பக்திப் பாடல்கள் கொண்ட காணொளிப் பேழையையும் பெற்று இன்புறுவதோடு இறையருளும் பெற்று ஏகுமாறு வேண்டுகின்றோம்