குப்பிழான் வடக்கில் வறுமை கோட்டுக்கு உட்பட்ட மக்களுக்கு காணிகள் வழங்கி வைப்பு. updated 30-08-2019ஜேர்மனியை வதிவிடமாக கொண்ட சமூக செயற்பாட்டாளர் திரு திருமேனி பஞ்சாட்சரதேவன் அவர்களின் நிதிப் பங்களிப்புடன் குப்பிழான் வடக்கு பகுதியில் காணி கொள்வனவு செய்யப்பட்டு காணி இல்லாத வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் 3 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது. அவரின் தாயார் அமரர் திருமதி தையல்முத்து செல்லையாவின் (அம்மா) அவர்களின் ஞாபகார்த்தமாக வழங்கப்பட்டது. இந்த காணி வழங்கும் நிகழ்வு 29-08-2919 அன்று நடைபெற்றது.


இந்த காணியை வழங்கியதூடாக அரசாங்கத்தின் இலவச வீடடுத் திட்டம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. தமது வாழ்வில் தமக்கென சொந்தமாக காணியோ வீடோ இல்லாத அந்த ஏழை மக்களுக்கு ஒரு வரப்பிரசாதம் ஆகும்.