மரண அறிவித்தல்

  திருமதி அமிர்தவதனி கணபதிபிள்ளை  
தோற்றம் 28 -07-1956 மறைவு 01-09-2019


குப்பிழானை பிறப்பிடமாகவும் வவுனியாவை வதிவிடமாகவும் கொண்ட திருமதி அமிர்தவதனி கணபதிபிள்ளை அவர்கள் 01-09-2019 ஞாயிற்றுக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற அமிர்தபிள்ளை தவமணி(நெதர்லாந்து) தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான அருள்வாசகம், பாக்கியம் அவர்களின் அன்பு மருமகளும்,

அருள்வாசகம் அவர்களின் அன்பு மனைவியும்,

இராஜகுரு (கனடா), லோகாம்பிகை (இலங்கை), அமிர்தநாதன்(இலங்கை), காலஞ்சென்ற கமலநாதன், யசோதா(இங்கிலாந்து), வின்சன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சரோஜினி, மஞ்சுளா, காலஞ்சென்ற சிறிநாகேஸ்வரன், இரஞ்சிதமலர் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அமிர்தமணி(இலங்கை), அமிர்தஇராசவதனி(நெதர்லாந்து),தவலிங்கம்(டென்மார்க்) , அமிர்தரூபினி(கனடா), தவக்குமார்(சுவிஸ்) அமிர்தகௌரி(சுவிஸ்), அமிர்தராணி (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற சுந்தரலிங்கம், இராசரத்தினம், பராசக்தி, காலஞ்சென்ற திருநாவுக்கரசு, சுதா, குணபாலன், வினோ, காலஞ்சென்ற வன்னியசிங்கம், சோமசுந்தரம், அன்னபூரணம், காலஞ்சென்ற வீரசிங்கம், நாகேஸ்வரி, புஸ்பமலர், பரமேஸ்வரி, காலஞ்சென்ற அருந்தவமலர், யோகராசா, கனகராசா, கனகேந்திரன் ஆகியோரின் மைத்துனரும்,

சாருக்கா, சாருக்கியன், துர்க்கா, சாய்பிரகாஷ், சாயிசன், சிந்துஜா, அனுசிஜா, அனித்து, அக்ஷியன், அஜய், அக்ஷயா ஆகியோரின் அன்பு பேத்தியுமாவார்.


அன்னாரின் இறுதிக்கிரியைகள் 04-03-2019 புதன்கிழமை 12 மணிக்கு புலவுநகர் பூவரசன் குளம், வவுனியா பொதுமயானத்தில் தகனக் கிரியைகள் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

தகவல்
குடும்பத்தினர்