4ம் ஆண்டு நினைவஞ்சலி

 
   
அமரர் சின்னையா இரத்தினம்
அன்னை மடியில் 29-07-1942 ஆண்டவன் அடியில் 16-12-2012

யாழ் கட்டுவன் ஊரங்குணையை பிறப்பிடமாகவும் ஜேர்மனி எடன்கோபனை வதிவிடமாகவும் கொண்டிருந்த அமரர் சின்னையா இரத்தினம் அவர்களின் 4 ஆண்டு நினைவஞ்சலி.


ஊரங்குணை மண்ணில்
உதிர்த்து
புலம்பெயர் மண்ணில்
உதிர்ந்து போன
எங்கள் உன்னத
ஆத்மா இரத்தினம்
ஐயாவின்
நான்காவது நினைவஞ்சலி
அதற்குள் பூத்து விட்டதா...!!!

எத்தனை கனவுகள்
உங்களை சுற்றி
வாழ்ந்து இருக்குமே
அத்தனையும்
இழந்ததது போல்
எங்கள் உணர்வுகள்
கிடந்து துடிக்கிறதே ஐயா...!!!

முத்தான உங்கள்
புன்சிரிப்பை
எப்படித்தான்
மறப்போம்
எப்படித்தான் உங்களை
நினைக்காமல்
இருந்துவிடுவோம்
எல்லாமே இழந்தது போல்
இன்னும் எங்கள் மனது கிடந்து துடிக்கின்றதே ஐயா...!!!

உங்களோடு பழகிய
நினைவுகள் தான்
எங்களை
சுற்றிக்கொண்டு
இருக்கின்றதே ஐயா
தினமும் தினமும்...!!!

வாழ்ந்து காட்டியவர்
நீங்கள்
வாழ்க்கைக்கு
அர்த்தம் சொன்னரும்
நீங்கள்
உங்கள் வழியைப்
பின்பற்றி
வாழ்வோம் ஐயா
உங்கள் நினைவுகளில்
என்றென்றும்...!!!

நாலண்டு அல்ல
எத்தனை
நூறாண்டுகள்
கடந்தாலும் உங்களை
மறவா வாழும் உங்கள் அன்பு

மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள்.